வாசி

வாசி தனை கூட்டிடவே வழியை கேட்டேன்
வகையான வழி தனை சொன்னான் பாரே!
தினமும் தான் சிங் என்றே கூட்ட சொன்னான்
புருவ மதில் பிடித்துதான் நில்லு என்றான்

என் நாதன் சொன்னபடி நின்றேன் அய்யா
நினைஉடனே தினகரனை கூட்டி வந்தேன்
வகையான நிலை தனை கட்டி என்னை
வஞ்சனை இல்லா மூச்சின் மூலம் அறிய வைத்தான்

சொன்னதுபோல் நினை உடனே கூட்டி வந்தால்
குறைவில்லை குறைவில்லை கூடும் பாரே
சீற்றமுடன் வாசித்தான் சீறிப் பாயும்
சிந்தை உடன் சிரசில் தான் ஏத்தி பாரே

பார்த்தாலே அவன் உருவம் என்ன சொல்வேன்
பாரெல்லாம் அவன் தானே பரமாய் நின்றான்
முடிவில்லா அவன் உருவம் முடியாதையா
முனைப்புடனே உன் உள்ளே பார்த்து தெளியே!

அவன் உருவம் ஆண் அல்ல பெண் அல்ல அலியும் அல்ல
ஹரி அல்ல அரன் அல்ல அன்னையும் அல்ல
எட்ட் அல்ல இரண்டு அல்ல பத்தும் அல்ல
ஒப்பிட்டு சொல்லும் இந்த இருமைக்கு அப்பால்
ஒன்றாகி நின்றான் அவன் என்னே சொல்வேன்!

ஒருமை உடன் வாசி தான் கூட்டி வந்தால்
உடம்பெல்லாம் உயிர் உடனே கலந்தே பாயும்
உண்மை இது உண்மை இது சொன்னேன் பாரே
என்சொல்வேன் என் நாதன் கருணை தானே

Comments