நான் பெரும் நட்பே !


நான் பெரும் நட்பே  !
நான் வேதனையுற்ற சமயமெல்லாம் தெளிவுற
நல் வார்த்தைக்கூறி என்னை நன்நெறி தவராது
பார்த்துக்கொள்வான் மௌன மொழிபேசி என்னுடன்
உரையாடி நேரம் கழிப்பான்  அவ்வப்போது

ஞானம் தூண்டும் புதிர் கேட்டு சிந்தனையில்
என்னை  திளைக்க செய்வான் பொன்முகூர்த்த
வேலையிலே யாரும் அறியாவண்ணம் என்னை எழுப்பி
இதுவே நல் தருணம் செய்க தவம் என்பான்

தக்க நிலை கூறி என்னை தவத்தில் ஆழ்த்துவான்
தானே அவ்விடம் நின்று வேறேது தடைகள்
நேராது காவலனாய்  இருப்பான் எல்லாம்
செய்வித்த என் பெருநட்பை ஐயா நீயோ

இதுவே உபகார சத்தி என்றும் இதுவும்
என் ஐயனின் திருஅருள் என்றும் கூறி
என்னை தெளிவுபட திருத்தி அருளினாய் -ஆயினும்
நான் இவ்வாறு அறிந்தேன் என்று தெரிந்தாள்

என் நண்பன் என்னுடன் நட்புடன் இருக்க மறுப்பானோ
அந்தோ ! என்பால் கொண்ட அன்பினால் நீர்தான்
அவனிடம் நான் அறியேன் என பொய்புகல
முனைவாயோ ,  நான் நண்பனிடம் பொய் சொல்ல

முனைந்தேன் என்று தெரிந்தாலே அவன் துடிதுடித்து
போவானே என்னை நட்பின் இலக்கணம்
அறியாதவன் என்று கடிந்து கொள்வானே அந்தோ
நான்தான் என் செய்வேன் எங்கு சொல்வேன்

என் உள்ளம்  படும் வேதனையை
 நீ அறிவாயே ,ஆகையால் என் கருணை
வள்ளலே என் நண்பன் வந்து கேட்டாள்
நீ அவனிடம் பொய்யேதும் கூறாதே !



Comments